Sunday, May 25, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டா தங்கிய சிங்கப்பூர் ஹோட்டல் கட்டணம் 67 மில்லியன் ரூபா?

கோட்டா தங்கிய சிங்கப்பூர் ஹோட்டல் கட்டணம் 67 மில்லியன் ரூபா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக செலவிடப்பட்ட 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தற்போது தாய்லாந்தில் உள்ள கோட்டாபய, அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என மேலும் தெரியவந்துள்ளது.

அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் பேங்கொக் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles