ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவுக்கு வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் இந்த விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று COP குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, அனைத்து வரிகளுக்குப் பிறகு ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.