QR குறியீட்டின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வார தரவு பகுப்பாய்வின் பின்னர் எதிர்வரும் வாரத்தில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட அதே அளவு எரிபொருள் இந்த வாரமும் வழங்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீற்றர் பெற்றோல்.
முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் பெற்றோல்.
வேன்களுக்கு 20 லீற்றர் பெற்றோல்.
கார்களுக்கு 20 லீற்றர் பெற்றோல்.
லொறிகளுக்கு 50 லீற்றர் பெற்றோல்.
பேருந்துகளுக்கு 40 லீற்றர் டீசல்
முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் டீசல்.
வேன்களுக்கு 20 லீற்றர் டீசல்.
கார்களுக்கு 20 லீற்றர் டீசல்.
லொறிகளுக்கு 50 லீற்றர் டீசல்.