எரிபொருள் விலையில் இன்று (15) திருத்தம் இடம்பெறவுள்ளது.
14 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று (15) விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்றைய விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.