அரிசி, பருப்பு உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ளது.
உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, மிளகாய், வெங்காயம் போன்ற இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை இன்றும் (15) குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த விலை 430-450 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உலர் மிளகாயின் மொத்த விலை 1350 முதல் 1500 ரூபாவாகவும் உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா, வெள்ளை பச்சை அரிசி, சிவப்பு பச்சை அரிசிபோன்றவற்றின் மொத்த விலை 170-190 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 160-165 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் மொத்த விலை 140-150 ரூபாவாகவும் உள்ளது.
எனினும் புறக்கோட்டையில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மரக்கறிகளின் சில்லறை விலைகள் அதிகமாக காணப்படுவதுடன், எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்துச் சிரமங்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.