Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெல்லவாயவில் மாயமான சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்

வெல்லவாயவில் மாயமான சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்

வெல்லவாய பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியாருவர் கடந்த 10 ஆம் திகதி காணாமல் போயிருந்த, செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் வீட்டுக்கு கூலி வேலை செய்வதற்காக நபர் ஒருவர் (25) வந்து செல்வதாகவும், சம்பவ தினத்தன்று பகல் இரண்டு மணியளவில் வீட்டுக்கு வந்துள்ள குறித்த நபர், சிறுமிக்கு யோகட் வாங்கிக்கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்து, சிறுமியின் தாய் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, சந்தேக நபர் தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்று கொண்டிருக்கும் போது பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

சந்தேக நபர் சிறுமியை பணத்திற்காக ஒருவருக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles