தனிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போதேஇ கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.