Tuesday, March 17, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபய இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தக்கோரி மனு

கோட்டாபய இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தக்கோரி மனு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் பல்வேறு இடங்களில் மறைந்திருந்து மாலைத்தீவுக்குச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தாய்லாந்தில் பாதுகாப்புக் கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பிரஜையும், முன்னாள் முதற் குடிமகனுமான அவருக்கு இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது சதி காரணமாக நாடு கடத்தப்பட்டாரா எனக் கண்டறியக் கோரி கடந்த ஜூலை 18ஆம் திகதி காவல்துறைமா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்திலிருந்து விலகியுள்ளதாகவும், இது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles