ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு, பாப்பரசர் 400 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் தேசிய மக்கள் தொடர்பாளர் பிரிவின் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவி, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் வத்திகானுக்கு சென்ற மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையிடம், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை தான் பாதுகாப்பதாக பாப்பரசர் உறுதியளித்திருந்தார்.
இந்த திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாப்பரசரினால், ஒரு இலட்சம் யூரோக்கள் (இலங்கை நாணய மதிப்பில் 400 இலட்சம் ரூபா) வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளைய தினம் கட்டுவாபிட்டிய தேவாலயத்திலும்இ நாளை மறுதினம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கும்இ தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவருவோருக்கும்இ உபாதைக்குள்ளாகியுள்ளோருக்கும் இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.