இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் பதவி ஏற்றதும் அயல் நாடான இந்தியாவுக்கு செல்வது வழமையாக இருந்து வந்துள்ளது.
எனினும் ரணில் விக்ரமசிங்க தமது முதல் விஜயமாக சீனா செல்லவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – சீனா – இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது கொள்கை ரீதியான அமைதியின்மை நிலவுகிறது.
குறிப்பாக சீனாவின் உளவு கப்பல் தொடர்பான பிரச்சினை வெடித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவை புறக்கணித்து, ஜனாதிபதி ரணில் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.