மின்சார சபை இலாபம் ஈட்டும் வரை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவ்வாறு செய்தால் மின்சார சபை என்ற நிறுவனமே அழிந்துவிடும் அபாயம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மின்சார சபை ஊழியர்கள் நிலைமையை புரிந்து கொள்வார்கள் எனவும் தொழிற்சங்கங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.