Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்துகளில் திடீர் சோதனை

பேருந்துகளில் திடீர் சோதனை

திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா இதனை தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

எனவே, மாகாண பேருந்துகளில் சோதனையிடுவதற்கு நடமாடும் சோதனை அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அபராதம் விதிக்கப்பட்டு, சம்பவங்களில் ஈடுபட்ட சில பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கூடுதல் தொகையை திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles