காலிமுகத்திடல் போராட்டம் நிறைவு செய்யப்படுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த அறிவித்தலை விடுத்தனர்.
தற்போது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றன.
இந்த போராட்டம் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.