சாதாரண தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய திருத்தங்களுடன் கூடிய வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை தபால் மா அதிபரினால் ஊடகத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் நேற்று (08) தெரிவித்தார்.
அதன்படி, இம்மாதம் 15ஆம் திகதிக்குள் புதிய கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
ஆனால், புதிய திருத்தங்களின்படி, அடிப்படை தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கும்.
எனினும், பார்சல் கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்கள் ஏற்கனவே இருந்த தொகையில் இருந்து குறைக்கப்படும் என்றார்.