அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
எதிர்வரும் வியாழன் (11) பௌர்ணமி விடுமுறை என்பதால், அதற்கு பதிலாக புதன்கிழமை பாடசாலைகளை நடத்த வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
