காலி முகத்திடல் போராட்டத்தின் அங்கத்தவர்களாக செயற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில்இ நேற்று அவர் பிரசன்னபடுத்தப்பட்டபோதுஇ இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட தேசிய பிக்குகள் முன்னணியின் அங்கத்தவர் கொஸ்வத்தே மஹாநாம தேரரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதாக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.