இந்த ஆண்டின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முன்வைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியை, டலஸ் அழகப்பெரும, ஜி எல் பீரிஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடா சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது அவர் இந்த விடயத்தைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினூடாக பொது மக்களுக்கு சலுகைகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றி நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே சர்வ கட்சி அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.