‘கோட்டா கோ கம’ போராட்டக் களத்தில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் 10ஆம் திகதி வரை அகற்றப்படாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
முறையான சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் உள்ள போராட்ட கூடாரங்களை அகற்றுமாறு பொலிசார் அறிவுறுத்தி இருந்த நிலையில், இதற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது
இதன்போது அரசின் சார்பில் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இவ்வாறு உறுதியளித்தார்.