முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வியாழக்கிழமை அவர் இலங்கை வருவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள அவரது விசா காலம் நிறைவடைகிற நிலையில்இ அவர் இலங்கை திரும்புவார் எனவும் இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கை திரும்புவார் என அரசாங்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.