Friday, June 26, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்

ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்

தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவிற்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா பசளையை கமநல மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடு கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

நெற் செய்கைக்காக ஒரு மூடை யூரியா பசளை 10 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கப்பட்டது.

எனினும், தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக ஒரு மூடை யூரியா பசளையை 15 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles