எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்றும், இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும், அதை மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன்,சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை.
எந்தவொரு நாடாளுமன்ற பிரதிநிதியும் இதனை எதிர்த்தால் அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.