இன்று (05) எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் எரிவாயு கப்பல்களை நாட்டுக்கு கொண்டுவர ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்தமாதம் 11ஆம் திகதி எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.