வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் விமான நிலையத்தில் டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பில் இன்று (04) இணையவழியில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.