கடந்த மே மாதம் 28 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.
அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஜோசப் ஸ்டாலினுக்கு பொலிஸ் பிணை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.