காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிட்ட வெளிநாட்டு பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மருத்துவ வதிவிட விசாவில் இலங்கை வந்த பிரித்தானிய பெண் ஒருவர் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மைய நாட்களில், அவர் காலி முகத்திடல் போராட்டத்தை ஆதரிப்பதாக சமூக ஊடகங்களில் பல காணொளிகளை பதவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இலங்கை மற்றும் அதன் பாதுகாப்புப் படையினர் குறித்து தவறான பிரசாரங்களைச் செய்து நாட்டுக்கு களங்கம் விளைக்கும் வகையில் செயற்பட்டதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இப்பெண் தமது விசா காலத்தை நீடித்து நாட்டில் தங்கியிருந்ததாகவும், இந்தப் பெண்ணின் கடவுச்சீட்டை குடிவரவு குடியகல்வு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் 7 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு குறித்த பிரித்தானிய பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.