வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டிற்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியின் அளவை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியின் அடிப்படையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் Duty Free வசதியை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சட்ட வழிகளில் இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியின் 50 வீதத்திற்கு இணையான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.