சட்ட வழிகளில் அதிக பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக தாம் முன்வைத்த இரண்டு ஆலோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் புதிய வரியில்லா கொடுப்பனவு (duty-free allowance) தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சட்ட வழிகளில் அனுப்பப்படும் பணத்தில் 50%க்கு இணையான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் முறைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.