டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இணையாக பேருந்து பயண கட்டணங்களை மீண்டும் குறைப்பது பயனற்ற விடயம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மீண்டும் டீசல் விலை குறையும் பட்சத்தில் பேருந்து பயண கட்டணம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்ட முடியும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.