நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைவரினதும் ஆதரவில் ஜனாதிபதி செயற்படுவதாகவும், அனைத்து கட்சிகளிலும் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுபவம் அவசியமானது எனவும் அமைச்சர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் உணர்வுகளைக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி நாட்டை கட்டியெழுப்புவது அவசியமாகும்.
அரசாங்கத்தை கவிழ்த்து, நாட்டை அழித்து, அதிகாரத்தைப் பெறுவதற்கு நினைக்காமல், சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே மிகவும் அத்தியாவசியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.