முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரஜை என்பதனால் இந்த நாட்டுக்கு வருவதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது.
அத்துடன், கோட்டாபய விரைவில் நாடு திரும்புவார் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அரசியல் செய்ய விரும்பினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.