Wednesday, May 7, 2025
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசபை அமர்வுக்கு முன் எம்.பிகளுக்கு குறைந்த செலவில் தேநீர் விருந்து

சபை அமர்வுக்கு முன் எம்.பிகளுக்கு குறைந்த செலவில் தேநீர் விருந்து

9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு நாளை (03) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு அனைத்தும் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பான ஒத்திகை நாளை (02) காலை நடைபெறவுள்ளது.

இதேவேளை, முதன்முறையாக நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இந்த நிகழ்வில் தேசியக் கொடி மட்டுமே ஏற்றப்படும்.

அத்துடன், வைபவத்தின் பின்னர் நடைபெறும் தேநீர் விருந்தை மிகக் குறைந்த செலவில் நடத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles