Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்

அரச நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்

அரசாங்கத்தின் பல நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலத்தில் அந்தப் பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பதற்காக அவர்களை விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே பல அரச நிறுவனங்களின் அசல் கதிரைகள் மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, அடுத்த வாரமும் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன் முன்னாள் பணிப்பாளர் நாயகங்களில் ஒருவரான நாலக களுவெவ மீண்டும் அரசாங்க செய்திப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படவுள்ளார்.

அந்த பதவியில் தற்போது கடமையாற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்கஇ வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் தலைவராக டபிள்யூ.பி. கனேகல மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக சட்டத்தரணி சுதர்சன குணவர்தன ஆகியோர் நியமிக்கப்படவுளனர்.

ரயில்வே திணைக்களம், இபோச உட்பட பல நிறுவனங்களில் பல உயர் நாற்காலிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles