Sunday, July 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றை முற்றுகையிட JVPயே மக்களை அழைத்தது- பெத்தும் கேர்னர்

நாடாளுமன்றை முற்றுகையிட JVPயே மக்களை அழைத்தது- பெத்தும் கேர்னர்

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் ஜூலை 13 ஆம் திகதி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது தான் அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியே அதனை ஆரம்பித்தது எனவும் சமூக ஊடக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, லால் காந்த ஆகியோரே நாடாளுமன்றத்தை முற்றுகையிட அந்த இடத்திற்கு மக்களை அழைத்திருந்தனர்.

அந்த இடத்திற்கு வந்திருந்த மக்களுக்கு உதவவே நான் அங்கு சென்றேன்.

சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தனக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கு தயாராக இருந்த போது, திடீரென சுகவீனம் அடைந்தால் சில நாட்கள் தாமதமானது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles