Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMFக்கு வழங்கிய வாக்குறுதிகளை 16 தடவைகள் மீறிய இலங்கை

IMFக்கு வழங்கிய வாக்குறுதிகளை 16 தடவைகள் மீறிய இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை 16 தடவைகள் மீறியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு ஏற்ப பொருளாதாரம் அமையாமல் நமது தேவைக்கேற்ப பொருளாதாரம் அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது அவர் தெரிவித்த சில விடயங்கள் பின்வருமாறு:

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் இலங்கை தொடர்பில் கூறும் விடயங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியன.

ஒரு நாடு அபிவிருத்தி அடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலே ஏனைய நாடுகள் அல்லது நிறுவனங்கள் உதவ முன்வரும்.

நாம் இதற்கு முன்னர் 16 தடவைகள் இடம் நிதி பெற்றுள்ளோம். எனினும் அதை நாம் முறையாக பயன்படுத்தி எந்தவொரு அபிவிருத்தியையும் அடையவில்லை என்பதே உண்மை.

நிதி பெருவதற்காக அபிவிருத்தி திட்டங்கள் பல முன்வைக்கப்பட்டாலும், நிதி கிடைத்தவுடன் அவை கைவிடப்படுகின்றன.

அத்துடன், யாரோ நமக்கு உதவும் வரை நாம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. நமது நாட்டின் அபிவிருத்தியை நோக்கி நாமே நகர வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles