விசேட வைத்தியப் பயிற்சிகளுக்காக மருத்துவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக அவர்களுக்கு செலுத்துவதற்கு டொலர் இல்லாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இதனால் எதிர்காலத்தில் சுகாதார சேவையில் பாரிய நெருக்கடி ஏற்படக் கூடும் என சுகாதார சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
