Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டுக் கட்சி உறுப்பினர் மீது அழுகிய முட்டை வீசி தாக்குதல்

மொட்டுக் கட்சி உறுப்பினர் மீது அழுகிய முட்டை வீசி தாக்குதல்

மொட்டுக் கட்சியின் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மீது அழுகிய முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினரான சுரங்கி ரேணுகா என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நகரசபைத் தலைவர் சோமதாச தலைமையில் நடைபெற்ற நகரசபை கூட்டத்தின் போது நகர சபை ஆணையாளர் ருவன் விஜேதுங்கவை குறித்த பெண் உறுப்பினர் செருப்பால் அடித்து அவமானப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து நேற்று அவர் சபை அலுவலகத்துக்கு வந்திருந்த நிலையில் நகர சபை உறுப்பினர்கள் அவரை பலவந்தமாக வெளியே தூக்கி வந்து அழுகிய முட்டைகளால் தாக்கி இ கழிவு நீரை ஊற்றி அவமானப்படுத்தியுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸார் தலையிட்டு சுரங்கி ரேணுகாவை மீட்டு அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles