Wednesday, May 28, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்ட செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் கைது

போராட்ட செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் கைது

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாக கூறப்படும், போராட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பெத்தும் கேர்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை குற்றப் புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 18ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், தாம் சுகயீனமுற்றிருப்பதாக சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அவர் சமர்ப்பித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் தங்கியிருந்து பல்வேறு வழிகளில் மக்களை அந்த இடத்திற்கு வருமாறு தெரிவித்து, நாடாளுமன்ற பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட வீதித் தடைகளை உடைக்கும் பணியில் மக்களை வழிநடத்திச் சென்றுள்ளதாக என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் இருந்து பயணத்தடையும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles