Sunday, May 25, 2025
28.2 C
Colombo
செய்திகள்உலகம்கார்டியன் ஊடகவியலாளருக்கு இலங்கை விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு

கார்டியன் ஊடகவியலாளருக்கு இலங்கை விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு

ஹசனுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் (UL 196) ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆகாஷ் ஹசன் ட்விட்டர் பதிவொன்றில் விபரித்துள்ளார்.

அதில், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் விமான நிலையத்தில் ஐந்து மணி நேரம் தான் காவலில் வைக்கப்பட்டதாகவும், பின்னர் எந்த பாரபட்சமும் இல்லாமல், தனது ஏறுவதற்கான அனுமதிப்பத்திரம்  நிராகரிக்கப்பட்டு, விமான அனுமதி மறுக்கப்பட்டது  என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தாம் கொழும்புக்கு செல்வதைத் தடுத்தமைக்கான காரணத்தை இந்திய குடிவரவு அதிகாரிகள் ஒருபோதும் கூறவில்லை என ஹசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது விஜயத்தின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து இரண்டு அதிகாரிகள் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இலங்கையின் தற்போதைய நிலைமையை அறிக்கையிடுவதற்காக கார்டியன் ஊடகவியலாளரான தான் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles