ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அங்கு இருந்திருக்கவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்கள் பாக்தாத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடுருவியுள்ளனர். அங்கு தூதரகங்கள் உட்பட தலைநகரின் மிக முக்கியமான கட்டடங்கள் உள்ளன.
பாதுகாப்புப் படையினர் ஆரம்பத்தில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதாகத் தோன்றினாலும், பின்னர் அவர்கள் “நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்” என்று AFP செய்தி முகவரகத்தினடம் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



