Tuesday, March 18, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டா கைதாவார் என பயந்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர்

கோட்டா கைதாவார் என பயந்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறியமை மற்றும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தியை கேட்டு முதியவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வத்தளை ஹுனுப்பிட்டி பகுதியில் நேற்று (25) நண்பகல் 12.45 மணியளவில் கொழும்பு மீரிகம செல்லும் ரயிலில் பாய்ந்து அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிபத்கொடை பகுதியைச் சேர்ந்த 80 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் மகள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் தந்தை எழுதிய கடிதமொன்றையும் பொலிஸாருக்கு கையளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் தனது தந்தை மிகுந்த துயரத்தில் காலத்தை கழித்ததாகவும்> முன்னாள் ஜனாதிபதியை வெளிநாட்டில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்படுவதாக வெளியான செய்தியினால் அவர் மிகவும் கவலை அடைந்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles