மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் முன்வைத்த 06 மாத கொள்கை அறிக்கை மத்திய வங்கியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தற்போதைய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (25) தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்தக் கொள்கைப் பிரகடனத்தில் மாத்திரமன்றி, பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், முன்னாள் ஆளுநரும் தமக்கு இவ்வளவு கடன் வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கொள்கை வரைபடத்தின் பின்னர் கையிருப்பு பூஜ்ஜியத்திற்கு வீழ்ச்சியடைந்ததை சுட்டிக்காட்டிய மத்திய வங்கி ஆளுநர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வட்டியை கப்ரால் குறைக்கவில்லை என்றும் கூறினார்.