நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில் பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.
இதேவேளை எதிர்காலத்தில் கொவிட் கட்டுப்பாட்டுக்காக முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் வர்த்தமானி வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.