எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அட்டையான QR குறியீட்டு முறைமை நாளை (26) முதல் அமுலாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் வழங்கும் முறைமை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை தொடரும் என்றும் அதன் பிறகு முழுமையாக QR குறியீட்டு முறைமை மாத்திரம் அமுலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.