Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுட்டினிடமிருந்து ரணிலுக்கு கடிதம்

புட்டினிடமிருந்து ரணிலுக்கு கடிதம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வாழ்த்துக்களை அவர், கடிதம் மூலம் ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரஷ்யா-இலங்கை உறவுகள் எப்பொழுதும் நட்புறவைக் கொண்டவை என்பதை வலியுறுத்தும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், இலங்கை மற்றும் ரஷ்யாவின் மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் தாம் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கும் ரஷ்ய ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles