Sunday, May 25, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொவிட் சுகாதார விதிமுறைகளை மீண்டும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தல்!

கொவிட் சுகாதார விதிமுறைகளை மீண்டும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தல்!

மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களில் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறியளவு அதிகரிப்பு உள்ளதாக கொவிட்-19 தொடர்பான சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மக்கள் முன்னர் கடைபிடித்த சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீளவும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, முகக்கவசம் அணிதல், ஒரு மீற்றர் இடைவெளியை கடைபிடித்தல், தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் கூட்டம் கூடுவதைக் குறைத்தல் போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தற்போது, பரவுவது கொவிட்-19 வைரஸின் ஒமிக்ரொன் திரிபுடன் தொடர்புடைய உப பிறழ்வு என்றும் அது வேகமாகப் பரவி வருவதாகவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையின் தற்போதைய நிலைமை கட்டுப்படுத்தக்கூடிய மட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles