Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் EUக்கு விளக்க தயார் - வெளிவிவகார அமைச்சர்

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் EUக்கு விளக்க தயார் – வெளிவிவகார அமைச்சர்

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெளிவுபடுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இவர் நேற்று(24) பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிப்பதாவது,

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தவறாக விளங்கிக் கொண்டிருந்தால் அதனை தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்களின் போராட்டங்களை ஜனநாயக ரீதியாக மதிக்கும் அரசாங்கம் என்ற வகையில் அதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் முழுமையாக வழங்கத் தயார்.

எனினும், நாட்டின் நிர்வாக அலகுகளை கையகப்படுத்தி அரசாங்க செயற்பாடுகளை பாதிப்படையச் செய்ய அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles