நாட்டின் மொத்த பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 45.3 இலிருந்து 58.9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் குறிகாட்டி தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தில் இந்த அதிகரிப்பு உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளில் மாதாந்த அதிகரிப்புகளால் ஏற்பட்டுள்ளது.
அதன்படி உணவுப் பணவீக்கம் ஜூன் 2022 இல் 58 வீதத்தில் இருந்து 75.8 ஆக அதிகரித்துள்ளது
அதே நேரத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 2022 ஜூன் மாதத்தில் 43.6 ஆக அதிகரித்துள்ளது.
உணவு வகை அரிசி காய்கறிகள் புதிய மீன் சர்க்கரை பால் மா மற்றும் உலர் மீன் ஆகியவற்றின் விலைகள் இந்த மாதத்தில் அதிகரித்துள்ளன.
மேலும் உணவு அல்லாத வகைக்குள்ளும் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் ஆண்டு சராசரி பணவீக்கம் மே 2022 இல் 16.3 இல் இருந்து ஜூன் 2022 இல் 20.8 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் குறிகாட்டி தெரிவித்துள்ளது.