நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷக்களின் ஆவிகள் இன்னும் உலவுவதாகவும், அந்த ஆவிகளால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் எனவும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன்,போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு புதிய ஜனாதிபதி தயாராகி வருவதாகத் தெரிவித்த அவர், அதனை எதிர்கொள்ள JVP தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.