பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை சூழவுள்ள வளாகம்,பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 12.30 அளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் சகல வீதிகளிலும் வீதி தடைகளை ஏற்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரையும் அந்த வீதித் தடைகள் அகற்றப்படாதுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தின் போது காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.