Thursday, December 11, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலிமுகத்திடல் சம்பவம் கவலையளிக்கிறது - ஐநா

காலிமுகத்திடல் சம்பவம் கவலையளிக்கிறது – ஐநா

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு.

எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles